Abusheik Muhammed
மூஸாவின் வாரிசுகள் உறங்கும் போது
பிரௌன்கள் விழிப்பது இல்லை …!
தாக்கூத்தின் வாரிசுகள் முடக்கும் போது
சத்தியப்பாதையில் சஹீதுகள் மரிப்பது இல்லை!
உலக பிரௌன்கள் எல்லாம் ஒரே அணியில்
கொலை செய்யும் காலம் இது!
கேள்வி கேட்போரும் இல்லை
சித்திக்க நினைப்போரும் இல்லை !
இந்தியாவில் முன்னர் அப்சல் குரு
எகிப்தில் தற்போது முர்சி !
தீர்ப்பு எழுதும் பேனாக்கள்
தவறு செய்கின்றது!
தட்டி கேட்கும் வாள்கள்
தோலில் தொங்க மறுக்கின்றது ..!
ஜனநாயகம் , மதச்சார்பின்மை , சமரசம்
எத்தனை வேடம் போட்டாலும்!
கலிமா சொன்னால் இஸ்லாமை சொன்னால்
கழுத்திற்கு வரும் கத்தி !
வேடம் களைந்து நெஞ்சு துறந்து
நானே இறைவனின் அடிமை என
எப்பொழுது ஒத்துக்கொள்ளும் நமது புத்தி !
அறிவு என்னடா அறிவு
நம் சிந்தனைக்குள் எத்தனை அறிவு
அதில் இல்லை ஒற்றுமை தெரிவு
இது தான் சமூகத்தின் சரிவு!
உலக முஸ்லிம் நாட்டின் அதிபர்கள் எல்லாம்
நல்லவர்களை கொல்ல நடுவீதியில் !
இன்னுமா புரியவில்லை உனக்கு
குர் ஆன் உடன் போராடு பொது வீதியில்!
தூக்கு கயிறு இனியாவது
அறுபடட்டும்!


0 Comments