-Mohamed Awshaf-
தென்இந்தியாவின் கீழக்கரை பிரதேசத்தில் இருந்து சேகு முஹம்மது சீதக்காதீர் என்பவர் கடல் வழியாக இலங்கையின் புத்தளத்தை வந்தடைந்தார்.இவரின் வழி வந்த 10 தலைமுறையினர் தனது வைத்திய சேவையினை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். மேலும் அக்காலத்து வைத்தியர்களை “பரியாரி” எனும் சொல்கொண்டு மக்கள் அழைத்து வந்தனர்.
இவ்வாறு வைத்தியத் துறையை தொடர்ந்து வந்த வம்சமானது ;
01. சேகு முஹம்மது சீத்தக்காதீர் பரியாரி.
02. சேகு முஹம்மது இப்ராஹிம் கப்ப நெய்னா பரியாரி.
03. சேகு முஹம்மது இப்ராஹிம் நெய்னா பரியாரி.
04. சேகு முஹம்மது சுல்தான் பரியாரி.
05. சேகு முஹம்மது சேகு தமீம் பரியாரி.
06. சேகு முஹம்மது செய்தக் காதிர் பிள்ளை பரியாரி (பெரிய பரியாரி).
07. சேகு முஹம்மது சேகு அப்துல் காதர் பரியாரி.
08. சேகு முஹம்மது ஹுசைன் பரியாரி (சின்ன பரியாரி).
09. சேகு முஹம்மது ஹுசைன் சித்தி சுரைபா உம்மா. (சின்ன பரியாரியின் மனைவி).
இவர்களின் பின் சேகு முஹம்மது ஹுசைனின் பேரனான 10ம் தலைமுறை வைத்திய கலாநிதி அஸ்ரிப் ஜமால் அவர்கள் தனது சிறு பராயத்திலிருந்தே இந்த சித்த வைத்திய துறையில் ஆர்வம் கொண்டு பின் யாழ்ப்பாணம் சித்த ஆயுர்வேத கல்லூரியில் கல்வி பயின்று தனது வைத்திய பட்டத்துடன் வெளியேறி இன்று வரை தனது வைத்திய பரம்பரையை நிலைநாட்ட தொடர்ந்து இச்சேவையை செய்து வருகின்றார்.
மேல் குறிப்பிட்ட தலைமுறையில் இறுதியாக தனது பரம்பரை முறையில் வைத்தியம் செய்த 8ம் தலைமுறை சேகு முஹம்மது ஹுசைன் என்பவர் பற்றிய தகவல்கள் சில ;
1920-09-20ம் திகதி சேகு முஹம்மது தமீம் மீராநாச்சியா தம்பதியினருக்கு புதல்வராக பிறந்த சேகு முஹம்மது ஹுசைன் தனது 15 ம் வயதிலிருந்தே இவரது சகோதரரான செய்தக் காதிப்பிள்ளை பரியாரியிடம் தம் பரம்பரை வைத்திய முறையினை கற்று வந்ததுடன் தன் 19ம் வயதினில் வைத்திய சேவைக்குள் கால் பதித்தார். தொடர்ந்து இவரது சேவைகள் வளர இவரின் 35ம் வயதில் முஹம்மது ஹனீபா சித்தி சுரைபா உம்மா என்பவரை தன் வாழ்க்கை துனைவியாக தேர்ந்து எடுத்தார்.இத்தம்பதியினருக்கு 6 குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் இவர் நாடிப் பரிட்சையின் மூலம் நோய்களின் குணக்குறிகளை கண்டறிந்து அதற்குரிய நிவாரணத்தை வழங்கியதுடன் கர்ப்பத்தின் நிலை, மரணம் நிகழும் நாடி நிலைகள் என்பவற்றையும் கூறுபவர்களாக இவரும் இவருடைய தலைமுறையும் திகழ்ந்தது.
மேலும் இவர்கள் சமூகத்திற்கு அருந் தொண்டாற்றியதுடன் ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ சேவையையும் வழங்கியுள்ளார்கள்.
இவர்களின் மருந்துகள் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததுடன் வாத நோய், குழந்தை நோயியல், ஜன்னி (பைத்தியம்) கண்டத்திற்கு மேற்பட்ட ரோகங்கள், சரும ரோகங்கள் போன்றவற்றிற்கு ஹபெயர் பெற்றதாகவும் திகழந்ததுடன் இவற்றுள் சில இத்தலை முறையில்நடைமுறையிலும் உள்ளது.
பரியாரி ஹுசைன் மூலிகைகளைக் கொண்டு பல வகை மாத்திரைகள், எண்ணெய் மற்றும் க்றீம் போன்றவைகளை தயாரித்துள்ளார். அக்காலத்தில் இம்மருந்து வகைகள் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்பட்டது.
01. மண்ட கரப்ப எண்ணெய் - சளி நோய்களுக்கு.
02. சுவாச தைலம் - சுவாச நோய்களுக்கு.
03. சுவாச மாத்திரை- பெண்களின் சுவாச நோய்களுக்கு.
04. இஞ்சி மாத்திரை - வாத நோய்களுக்கு.
05. வாத தலைம் - கை, கால் வாத நோய்களுக்கு.
06. பெருங்காய சூரணம் - வாயு, வாத நோய்களுக்கு.
07. அமுக்கரா சூரணம் - உடல் சக்திக்கு.
08. சீணப்ப சூரணம் - நீர் அரிப்பு நோய்களுக்கு.
09. கள்ளி தைலம் - கண்டத்திற்கு மேற்பட்ட நோய்களுக்கு.
10. நிலப்பண்ண சூரணம் - நரம்பு தளர்ச்சி நோய்களுக்கு.
11. நீர்வட்டி முத்து க்றீம் - புண் நோய்களுக்கு.
சுமார் 50 ஆண்டுகள் தன் வைத்திய துறையில் சிறப்பான தொண்றுகளை ஆற்றி வந்த இவர் 1987ம் ஆண்டளவில் கடும் நோயினால் பீடிக்கப்பட்டு சுமார் நான்கு வருடம் நோய் குணமடையாத நிலையில் 1991-02-28ம் திகதி இறையடி சேர்ந்தார்.
இவரின் மறைவின் பின்னர் அச்சேவையை அவரது மனைவியார் சித்தி சுரைபா உம்மா செய்து வந்தார். இவரிடம் தன் பேரனான அஸ்ரிப் ஜமால் சிறு பராயத்திலிருந்தே மருந்தியல், நாடி சாஸ்திரம், நோயியல் என்பவற்றினை கண்றறிந்து தனது மேலதிக கல்வியைத் தொடர யாழ்ப்பாணம் சித்த வைத்திய கல்லூரிக்குச் சென்று வைத்திய கலாநிதியாக வெளியேறி தனது பரம்பரையின் 10ம் தலைமைக்குறிய வைத்திய சேவையினை வெற்றிகரமாக கொண்டு செல்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி ; புத்தெழில் பத்திரிகை
இவரின் மறைவின் பின்னர் அச்சேவையை அவரது மனைவியார் சித்தி சுரைபா உம்மா செய்து வந்தார். இவரிடம் தன் பேரனான அஸ்ரிப் ஜமால் சிறு பராயத்திலிருந்தே மருந்தியல், நாடி சாஸ்திரம், நோயியல் என்பவற்றினை கண்றறிந்து தனது மேலதிக கல்வியைத் தொடர யாழ்ப்பாணம் சித்த வைத்திய கல்லூரிக்குச் சென்று வைத்திய கலாநிதியாக வெளியேறி தனது பரம்பரையின் 10ம் தலைமைக்குறிய வைத்திய சேவையினை வெற்றிகரமாக கொண்டு செல்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி ; புத்தெழில் பத்திரிகை


0 Comments