Subscribe Us

header ads

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பு திடீர் ரத்து சவூதி மன்னர் சல்மான் அறிவிப்பு.....!!



உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை திடீரென்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான முழு விவரங்கள் பின்வருமாறு.....

நாளை மறுநாள் வியாழன் கிழமை அமெரிக்காவில் ஒபாமா மற்றும் அரபு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு ஒன்று நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் சவூதி அரேபியாவில் புதிதாக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் கலந்து கொள்வார் என்றும் மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு அமெரிக்க அதிபரை சவூதி மன்னர் சல்மான் வெள்ளை மாளிகையில் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மன்னர் சல்மானின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவருடன் இரு தரப்பு உறவுகளை வலுவாக்குவது குறித்து உரையாட ஒபாமா ஆவலுடன் இருப்பதாகவும் அமெரிக்க நிர்வாகம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில்.... 

மன்னர் சல்மான் திடீரென்று தனது அமெரிக்க பயணத்தையும் அமெரிக்க அதிபரின் சந்திப்பையும் ரத்து செய்துள்ளார். 

ஏமனில் வான்வழி தாக்குதலை நிறுத்தி அங்கு பாதிக்கபட்டுள்ள அப்பாவிகளுக்கு உதவும் இந்த நேரத்தில் தன்னால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்றும் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் துயர் துடைப்பதில் தான் கவனம் செலுத்த போவதாகவும் மன்னர் சல்மான் கூறியதாக சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவூதி மன்னர் சல்மான் அமெரிக்க அதிபரின் சந்திப்பை ரத்து செய்திருப்பது அமெரிக்க நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மன்னர் சல்மானின் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் தம்முடைய செயல்களை அதிரடியாக செய்து வருகிறார், அவற்றில் இதுவும் ஒன்று.... 

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி

Post a Comment

0 Comments