தற்பொழுது உலகில் உள்ள அனைவரும் ஒரு விடயத்தை அறிந்து கொள்ள இணையத்தின் உதவியை நாடுகின்றனர். அதில் தேடல் பொறியாக அதிகமானவர்கள் யாஹூ, கூகுள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், அனைவரும் பாவித்து வரும் சமூக ஊடக வலைதளமான பேஸ்புக்கும் தற்போது புதிய தேடல் செயலியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்காக சில அமெரிக்கரிகளின் பேஸ்புக் பக்கத்தில் Add Link வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் ஒருவருக்கு தேவையான எந்த தகவலையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், நாம் தேடும் விடயம் தொடர்பான இணையதள லிங்க்குகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
பேஸ்புக் இந்த புதிய தேடல் பொறியை அறிமுகம் செய்துள்ளதால் தற்பொழுது தேடல் பொறிகளில் முன்னணியிலிருக்கும் கூகுள் அச்சமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே முன்னிலையிலிருந்த யாஹூ தேடல் பொறியை, கூகுள் பின்தள்ளியமை குறிப்பிடத்தக்கது.-CMT-


0 Comments