Subscribe Us

header ads

ஐ.ம.சு. கூட்டமைப்பின் மேடையில் விரைவில் தோன்றுவேன்: மகிந்த ராஜபக்ச...


தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேடையில் விரைவில் தோன்றவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கான திகதியை மக்களே தீர்மானிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல் வெலகெதர மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்திற்கு அனுப்பியிருந்த செய்தியில் இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் தமக்கு குருநாகலில் இருந்து கிடைத்திருந்தன.
இந்தநிலையில் நேற்றைய குருநாகல் கூட்டத்துக்கு சமூகமளிக்க முடியாமை குறித்து மகிந்த தமது செய்தியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் செய்தியை முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வாசித்தார்.
விடுதலைப்புலிகளை தோற்கடித்து, நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தம்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் தமக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ச அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments