பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமர் மோடியும் கமரூனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் வலைத்தளத்தில், ‘மறுபடியும் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



0 Comments