Subscribe Us

header ads

சிறைக் கூண்டுகள் இருந்தவாறு செல்ஃபி எடுத்து கொண்ட மேல் மாகாண முதலமைச்சர்

நீதிமன்றத்தின் சிறைக் கூண்டில் இருந்தவாறு மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோர் நேற்று செல்ஃபி எடுத்து கொண்டனர்.
அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. இவர்களுக்கு பிணை வழங்கப்படும் வரை அவர்கள் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் கூண்டிற்குள் இருந்தவாறு எடுத்து கொண்ட செல்ஃபிகள் அவர்களின் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்டிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார, உதய கம்மன்பில, மதுமாதவ அரவிந்த, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments