வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏழு பேரிடம் பணத்தைப்பெற்று வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றி மோசடி செய்த அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபரெருவரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது வாங்கிய பணம் முழுவதையும் அவரவருக்கு வழங்குவேன் என உறுதியளித்ததையடுத்து குறித்த நபரை நீதிபதி பிணையில் விடுவித்து அடுத்த மாதம் 4 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
குறித்த நபர் அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, பள்ளிக்குடியிருப்பு, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஏழு பேரிடம் இருந்து 5இலட்சத்து 10 ஆயிரம் ரூபா (510 000.00) பணத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
ஏமாற்றப்பட்டவர்கள் ஏழு பேரும் அக்கரைப்பற்று பொலிசில் சனிக்கிழமை (9) காலை முறைப்பாடு செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.-VK-


0 Comments