உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை
தீர்மானிக்கப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பௌத்த சாசன
அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் முடிவடைந்த 234 உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவை கூடி ஆராயவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்தது. அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஒரு மாதத்திற்கு நீடித்திருந்தது.
பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் தேர்தல் நடத்துவதா அல்லது செயலாளர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தொகுதிவாரி அடிப்படையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தொகுதிவாரி அடிப்படையில் நடாத்த வேண்டுமாயின் மூன்று நான்கு மாத கால அவகாசம் தேவைப்படும்.
தொகுதி நிர்ணய அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புதல், வர்த்தகமானியில் அறிவித்தல், நாடாளுமன்றில் சமர்ப்பித்தல், மக்களின் கருத்துக்களை கேட்டறிதல் போன்ற பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து அமைச்சரவை தேர்தல் நடாத்துவது குறித்து தீர்மானிக்கும் என அமைச்சர் கரு ஜயசூரிய நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

0 Comments