பொதுபல சேனா அமைப்பு சர்வதேச சதி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
கருத்து வெளியிட்டதை தொடர்ந்து தமது அமைப்பை சர்வதேச சதி என சொல்பவர்
வெளிநாட்டு கொந்தராத்துகாரர் என குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஊடாக போதுபல சேனா மீது
சிங்கவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருவது அதிரித்துள்ளதாக
சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு அதுவும் அரசியல் ரீதியாக தமக்கு சேறு
பூசும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.இதன் பின்னணியில்
சதிகாரர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தமது அமைப்பு அரசியல்
கட்சியாக உருவெடுப்பது சிலருக்கு ஜீரணமாகவில்லை என குறிப்பிட்ட அவ்வமைப்பு
இதனால் எமக்கு எதிராக ஊடகங்கள் சேறு பூச தொடங்கியுள்ளதாக அவ்வமைப்பு
சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அவர்கள் பொதுபல
சேனா அரசியல் கட்சிக்கு தலைமை தாங்க உள்ளதாக பரவும் செய்தியில் எவ்வித
உண்மையும் இல்லை என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுபல சேனா தேசபாலன பெரமுன என தாம் அரசியல் கட்சிக்கு அவ்வமைப்பு பெயர் சூட்டியுள்ளதாக தகவலைகள் வெளியாகியுள்ளது.


0 Comments