மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
மாகாண சபை சட்டத்தின் கீழ் தன்னை பதவி விலக்க மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனுவை இன்று நீதிமன்றம் பரிசீலனை செய்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.-VK-


0 Comments