Subscribe Us

header ads

இஸ்லாத்தில் கொலைக் குற்றத்தின் கொடூரம்...




A.J.M. மக்தூம்
மனிதன் இறைவனால் கட்டி எழுப்பப் பட்ட கட்டிடம் போன்றாவான். அவனைப் படைத்து உருவமைத்து அவனது ரூஹில் இருந்தும் ஊதி உள்ளான்.
ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். (32:9)

அவனுள் ஊதப்பட்டுள்ள “ரூஹ்” (உயிர்) இறைவனின் அடமானமாகும். அவனது நரம்பு நாளங்களில் ஓடும் இரத்தம் இறைவனின் அமாநிதமாகும்.
இந்நிலையில் இறைவனின் அந்த கட்டிடத்தை அத்துமீறி வந்து ஒருவன் உடைத்தெறிந்து, அவனது ரூஹை சூறையாடி, அவன் வழங்கிய இரத்தத்தை அநியாயமாக ஓட்டினால், அத்து மீரப்பட்டவன் யாராக இருந்தாலும் அது மிகவும் கொடிய கொடூர குற்றமாக கருதப் படும்.
இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும்.
இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும். (திர்மிதி, நஸாஈ போன்ற நூல்களில் வந்துள்ள செய்திகள் இந்த கருத்தை உறுதி செய்கின்றன).
அகிலத்தின் அதிபதி அல்லாஹ் இறக்கி அருளியுள்ள பின்வரும் சங்கை மிக்க அல் குர்ஆன் வசனம் ஒரு தனி மனிதனுக்கு இஸ்லாம் வழங்கும் மதிப்பையும் மரியாதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
Description: start-iconوَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًاDescription: end-icon [النساء: 93]
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (4:93)
கொலைக்குற்றத்திற்கு இறைவன் விடுக்கும் கடும் எச்சரிக்கை இது. எந்தவித பின்நூட்டலோ, வியாக்கியானமோ இன்றி விளங்க முடியுமான மிகவும் தெளிவான வசனம்.
நபிமார்கள் வந்து சென்று நீண்ட நாட்கள் சென்று விட்ட நிலையில், மனித உயிர்களின் மதிப்பும், பெறுமதியும் மனித உள்ளங்களை விட்டும் அகன்று விட்டன. மனித இரத்தத்தை ஓட்டுவதை மிகவும் இலேசாக கருதி விட்டனர். ஒருவருக்கொருவர் தாக்குதல் நடாத்துவதை சாதாரணமாக கருதுகின்றனர். இதனால் புனிதமிக்க மனிதன் மிகவும் கேவலமானவனாக மாறிவிட்டான்.
உலக பேராசை, மார்கத்தின் பெயரால் இடம்பெறும் இன, மத, தேசிய வாதம், அரசியல் வெறுப்புணர்வுகள் போன்றவையே இந்நிலைக்கு மனித சமூகத்தை தள்ளிவிட்டது. இஸ்லாத்தை முறைகேடாக விளங்கியதோடு, மடமைக்கால சிந்தனைகள் உள்ளங்களில் குடிகொண்டமையே இதற்கு பிரதான காரணிகளாக விளங்குகின்றன.
இஸ்லாம் வந்த போது அரேபியர்கள் அறியாமை என்னும் ஆடைகளுடன் வளம் வந்து கொண்டிருந்தனர். சிலர் மனிதனை விட மிருகங்களை மதிப்பிற்குரியதாக கருதி வந்தனர். இதன் காரணமாகவே சாதாரண ஓர் ஒட்டகத்திற்காக அரேபியர்களுக்கு மத்தியில் பல தசாப்த காலமாக யுத்தங்கள் மூண்டுள்ளன. இதனால் பல உயிர்கள் மாய்ந்து போய் உள்ளன. பல கோடி பேர் படு காயங்களுக்கு ஆளாகி உள்ளனர். மனித இரத்தங்கள் வெள்ளமாக ஓடி உள்ளன.
கவிதையின் ஒரு வரியின் காரணமாக, அல்லது ஒரு வார்த்தையின் காரணமாக இரு வெவ்வேறு அரபு கோத்திரங்களிடையே பாரிய யுத்தங்கள் மூண்ட வரலாறுகளும் உண்டு. “யுத்தத்தின் ஆரம்பம் ஒரு வார்த்தை” என்பது அரேபியர்களின் பழமொழி.
ஏதாவது ஒரு அரேபிய கோத்திரத்தில் மதிப்பிற்குரிய ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால், அதற்காக பல பேரை பலி தீர்க்காமல் விடமாட்டார்கள். கொலை குற்றங்களை இந்த அளவுக்கு சாதரணமாகவும், இலேசாகவும் கருதி வந்தார்கள்.
அறிவின் ஒளி மங்கி, மனிதர்களிடையே மார்கத்தின் பெறுமதி குன்றி போய், மக்கள் அறியாமையில் மூழ்கிப் போன போதே இஸ்லாம் வந்து, மனித சமூகத்திற்கு உரிய மதிப்பை வழங்கியது. வணங்கி வழிப்பட தகுதி மிக்க ஒரே  இறைவனை வணங்குவதை முதல் நிலைக் கடமையாக ஏற்படுத்தியது இஸ்லாம். கற்கள், மரங்களை வணங்குவதை விட்டும் மனித சமூகத்தை தூய்மை படுத்தியது.
அதன் பிறகு மனித உயிருக்கு உரிய மதிப்பை வழங்கிய இஸ்லாம் கடந்த கால பனூ இஸ்ரேல் சமூகத்திற்கு விதித்த சட்டங்களில் ஒன்றை இந்த சமூகத்திற்கும் விதியாக்கியது. அல் குர்ஆன் அதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது,
قال الله - عز وجل -: Description: start-iconمِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًاDescription: end-icon [المائدة: 32].
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்.  (5:32)
ஒரு மனிதனுடைய வாழ்வை குறைத்து மதிப்பிடுவது மக்கள் யாவரையும் அவமானப் படுத்துவது போன்றாகும், ஒரு ஆத்மாவை கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொல்வது போன்றாகும். ஒரு மனிதனின் உயிரின் மகத்துவம் முழு உம்மத்தின்  உயிர்ளுக்கு சமமாக கருதப்படும். ஒரு மனிதனை வாழ வைப்பது முழு மனித சமூகத்தையும் வாழ வைப்பதற்கு சமனாகும் என்பதையே மேற்படி அல் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
ஆனால் அறியாமை கால மக்களோ ஒரு உயிருக்கு பதிலாக ஒரு சமூகத்தையே கொன்று குவித்துள்ளார்கள் என்று வரலாறு குறிப்பிடுகின்றது.
முஸ்லிமோ, இறை மறுப்பாளரோ யாராக இருந்தாலும் அவனுடைய உயிர், உடைமைகள், உரிமைகளை பாதுகாப்பதற்காக இறைவன் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்துள்ளான். இறைவனுக்கு இனை கற்பித்தல் மிகப்பெரிய பாவமாகும். இது போன்றே, கொலை குற்றம் புரிந்தவனது தௌபா ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்று அறிஞர்கள் கருத்து முரண்பாடு கொள்ளுமளவுக்கு கொலை என்பது ஆபத்தான குற்றமாக கருதப் படுகிறது.
قال رسول الله - صلى الله عليه وسلم -: «كل دمٍ عسى الله أن يغفره إلا الرجل يموتُ كافرًا، أو الرجل يقتل مؤمنًا متعمِّدًا»؛ أخرجه أبو داود، وقال الحاكم: صحيحٌ الإسناد، وأخرجه النسائي أيضًا.
“இறை நிராகரிப்பாளனாக மரணித்தவனையும், ஒரு இறை விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் தவிர ஏனையோர் அனைவரினதும் பாவங்களையும் இறைவன் மன்னிக்க கூடும்” என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூ தாவூத், நாஸாஈ)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் உட்பட சகாபாக்களில் ஒரு குழுவினர், ஒரு இறை விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தவனின் தவ்பா அங்கீகரிக்கப் பட மாட்டாது என கருதி வந்துள்ளனர்.
عن ابن عمر - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «لن يزال المسلمُ في فُسحةٍ من دينه ما لم يُصِب دمًا حرامًا»؛ رواه البخاري.
ஒரு முஸ்லிம் அநியாயமாக ஒருவரை கொலை செய்து விட்டால் அவனது மார்கத்தின் விசாலத் தன்மையில் இருந்து அவன் தூரமாக்கப்பட்டு விடுவான். (இறை அருளை இழந்து அவனது நிலைமகள் நெருக்கடியாக மாறிவிடும்) என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
عن عبد الله بن عمر - رضي الله عنهما - قال: "إن من ورطات الأمور التي لا مخرج لمن أوقع نفسَه فيها: سفكَ الدم الحرام بغير حِلِّه"؛ رواه البخاري.
“தப்பிக்க வழியின்றி அழிவுக்குள் தள்ளிவிடும் குற்றச் செயல்களில் ஒன்று தான் உரிமையின்றி ஒருவனை கொலை செய்வது என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்,
Description: start-iconوَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا (68) يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًاDescription: end-icon [الفرقان: 68، 69].
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். (25:68,69)
عن عبد الله بن مسعود - رضي الله عنه - قال: قال النبي - صلى الله عليه وسلم -: «أول ما يُقضَى بين الناس في الدماء»؛ أخرجه البخاري ومسلم.
“மனதிர்களுக்கு மத்தியில் கொலை குற்றங்கள் தொடர்பிலேயே மறுமையில் முதலில் விசாரணை நடாத்தப் படும்” என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
قال النبي - صلى الله عليه وسلم -: «أكبرُ الكبائر: الشرك بالله، وقتل النفس، وعقوق الوالدين، وقول الزور»
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, கொலை செய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)




Post a Comment

0 Comments