Subscribe Us

header ads

இலங்கை தேசிய கொடியின் தர நிர்ணயங்களை சட்டமாக்க நடவடிக்கை


இலங்கையின் தேசிய கொடி குறித்த தர நிர்ணயங்கள் சட்டமாக்க சுதேச விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய சபையினால் தேசிய கொடியின் தரம் பற்றி அளிக்கப்பட்டுள்ள வரையறைகள் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சட்டமாக்கப்பட உள்ளது.
தேசிய கொடியின் தர நிர்ணயம் குறித்து வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்குமாறு அமைச்சு, நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளது.
தேசிய கொடியை பிழையாக பயன்படுத்துவது தொடர்பில் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தேசிய கொடியின் தரத்தை பரிசீலனை செய்யுமாறு இலங்கை தர நிர்ணயசபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கொடி பயன்பாடு தொடர்பில் எழுந்து சர்ச்சைகளைத் தொடர்ந்து அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments