Subscribe Us

header ads

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும்: கருஜயசூரிய


உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்துக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு பின்னர் ஒரே நாளில் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன பொது நிருவாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் கருஜயசூரிய  வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் தம்புள்ள, பண்டாரவளை, அக்கரைப்பற்று மாநகர சபைகள் உட்பட 234 உள்ளூராட்சி சபைகள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தன. அதன் பின்னர் இச்சபைகளுக்கு மே 15 ஆம் திகதி வரையான ஒன்றரை மாத கால நீடிப்பு வழங்கப்பட்டது. இதன் படி நேற்று முன்தினம் இச்சபைகள் கலைக்கப்பட்டன. 
ஏனைய உள்ளூராட்சி சபைகளில் சிலவற்றின் காலம் எதிர்வரும் ஜூலை மாதமும் சிலவற்றின் பதவிக் காலம் செப்டம்பர் மாதமும் முடிவடைகின்றன. இவைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் கலைக்கப்படும்.
செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் நாட்டிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments