ஒருநாள் அரசுமுறைப் பயணமாக மங்கோலியாவுக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் உலான்பாட்டர் நகரத்தில் உள்ள சிங்கிஸ் கான் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மங்கோலியாவுக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமரான மோடி, இன்று மங்கோலிய பிரதமர் சிமட் சைக்ஹான்பிலெக்-கை சந்தித்துப் பேசினார். சிமட் சைக்கான்பிலெக்- மோடி முன்னிலையில் இந்தியா- மங்கோலியா இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடிக்கு மங்கோலியா பிரதமர் சிமட் சைக்கான்பிலெக், அழகிய குதிரைக்குட்டியை நினைவுப் பரிசாக அளித்தார். இன்று பிற்பகல் மங்கோலியா அதிபர் ட்ஸாக்கியாகின் எல்பெக்டோர்ஜ்-ஐ சந்திக்கும் பிரதமர் மோடி, அவர் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.
மோடியை கவுரவிக்கும் வகையில் கூட்டப்பட்டுள்ள விடுமுறைக்கால பாராளுமன்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றும் அவர், பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். பின்னர், மங்கோலிய மக்களிடமிருந்து விடைபெறும் மோடி, தென் கொரியாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
0 Comments