விமானம் மற்றும் பாரசூட்களின் மூலம் வானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் படைப்பதில் உலகப்புகழ் பெற்ற வீரரான டீன் போட்டர்(43) மற்றும் அவரது தோழரான கிராஹம் ஹன்ட்(29) ஆகியோர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மலைப்பகுதியில் சாகச நிகழ்ச்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக பலியாகினர்.
கடந்த சனிக்கிழமை கலிபோர்னியாவில் உள்ள யோஸேமைட் தேசிய பூங்கா பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதியின் மேற்பரப்பில் விமானத்தில் இருந்தவாறு இரு பாறைகளுக்கு இடையில் குதிக்க முயன்றபோது, பாறை ஒன்றின் மீது மோதி இருவரும் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



0 Comments