Subscribe Us

header ads

சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கிய இலங்கையர்கள் இதோ..


சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிவைத்துள்ள 40 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர்கள்இடம்பெறவில்லை.

முக்கிய அரசியல்வாதி ஒருவரின் பெயர் இதில் இருக்குமா என தேடியவர்களிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அதிக பணம் பதுக்கியவர்களின் வரிசையில் தமிழர் ஒருவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 1 இலட்சம் பேர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 60 ஆயிரம் பேரின் விபரங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் பிரகாரம், கொழும்பைச் சேர்ந்த எட்மண்ட் பாலசூரிய என்பவர் அதிகளவான பணம் பதுக்கிவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

பல வருட காலமாக சுவிஸ் வங்கியில் கணக்கை பேணிவரும் இவர், தனது மனைவியின் கணக்கில் 10,668,094 அமெரிக்க டொலர்களும் மகளின் கணக்கில் 1,989,370 அமெரிக்க டொலர்களும் குடும்ப உறுப்பினர்களில் வங்கிக் கணக்கில் 16, 325,742 அமெரிக்க டொலர்களும் சேமித்துள்ளார்.

அதிகளவு பணம் பதுக்கியுள்ளவர்களின் வரிசையில் கொழும்பைச் சேர்ந்த சுப்ரமணியன் சுரேந்திரன் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கணக்கில் 13,129,904 அமெரிக்க டொலர்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்தப்பட்டியலில் உள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள், தற்போது வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலில் இலங்கையில் தேசமான்ய விருது வென்றவரான லலித் கொத்தலாவலவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

1997ஆம் ஆண்டுவரை சுமார் 9 வருட காலமாக சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிவைத்திருந்த இவர், பின்னர் தனது கணக்கை முடித்துக்கொண்டுள்ளார்.
அவருடன் மேலும் 17 இலங்கையர்கள், ஏற்கனவே தமது கணக்கை முடித்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநேகமானோர் எச்.எஸ்.பி.சி வங்கியியிலும் பணத்தை பதுக்கிவைத்துள்ளனர். குறித்த வங்கியின் அறிக்கையொன்றின்படி, அதிக பணத்தை பதுக்கிவைத்துள்ள பாலசூரிய தமது நீண்டநாள் வாடிக்கையாளரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வெளிநாட்டினர் தமது வரி ஏய்பு பணத்தை எச்.எஸ்.பி.சி வங்கியில் பதுக்கிவைத்துள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து குறித்த வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டுவர்ட் கலிவர், தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இச்செய்தியானது, பிரித்தானிய மற்றும் ஏனைய சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

இதேவேளை சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்களில் பண்டாரவளையைச் சேர்ந்த அனுர லெஸ்லி பெரேரா (1,692,959 அமெரிக்க டொலர்), கொழும்பைச் சேர்ந்த அருணா ராஜேந்திரன் வஸ்வானி (1,384,149 அமெரிக்க டொலர்), கொழும்பைச் சேர்ந்த நிகில் கிஷோர் ஹிர்தரமணி (817,446 அமெரிக்க டொலர்), வினோத் கிஷோர் ஹிர்தரமணி மற்றும் லீனா வினோத் ஹிர்தரமணி ஆகியோரது கணக்கில் 646,243 அமெரிக்க டொலர்கள் வைப்பில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments