Subscribe Us

header ads

சவுதியில் கணவனை பழி வாங்க வித்தியாச திட்டம் போட்ட மனைவி.(VIDEO)


சவுதி அரேபியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை பழி வாங்க பெண் ஒருவர் புதிய திட்டம் தீட்டினார்.

கணவனின் காரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறச் செய்து, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் கணவனுக்கு 2வது திருமணம் நடந்தது. தன்னை தவிக்க விட்டுச் சென்ற கணவனுக்கு சரியான பாடம் புகட்ட அந்த பெண் முடிவு செய்தார். அதன்படி, திருமணத்தன்று இரவு தனது சகோதரனை அழைத்து, கணவனின் காரை ஓட்டச் சொல்லியுள்ளார்.

காரில் சகோதரனும், அந்த பெண்ணும் சேர்ந்து பல சிக்னல்களை மதிக்காமல் சென்று போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளனர். ஒரே இடத்திலேயே பலமுறை சிக்னலை மீறி சென்றுள்ளனர். இது சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியது.

சவுதியில் சிக்னலை மீறி செல்வது அதிகபட்ச போக்குவரத்து விதிமீறலாகும்.

இத்தகைய விதிமீறலுக்கு தானியங்கி தொழில்நுட்பம் மூலம் அபாரம் விதிக்கப்படும். சிக்னலை மீறிய உடனே கேமராவில் பதிவான கார் நம்பரை வைத்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுவிடும்.

அதன்படி, சுமார் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையறிந்த அந்த கணவர் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கணவனை பழிவாங்கிய மனைவியை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ‘சம்பவம் நடத்த சமயத்தில் காரின் உரிமையாளர் திருமணத்தில் இருந்ததாகவும் அவர் காரை ஓட்டவில்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறிய அவரது முதல் மனைவியும், சகோதரனும்தான் அபாரத தொகையை கட்ட வேண்டும்’ என கூறி உள்ளனர்.

சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட தடை சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments