Subscribe Us

header ads

பர்மா விவகாரம் ;சவுதியில் ஆராய்வு


நேற்று செவ்வாய்க்கிழமை மக்காவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற்கைமாணவரான மௌலவி இபாம் தலைமையில் நடை பெற்றது.  

குறித்த சந்திப்பில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, குறிப்பாக தற்போது மியன்மாரில் நிகழ்ந்தேறி வரும் மத வெறியர்களின் காட்டு மிராண்டித்தனமான போக்குகள் குறித்தும் குறிப்பாகப் பேசப்பட்டது. மியன்மார் தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சவுதி அரேபிய அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகர் கலாநிதி அஷ்ஷெய்க் காலித் அஸ்ரி பூரண விளக்கமளித்தார். 

மேலும் இது தொடர்பில் தாம் மியன்மாரை பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியாத நிலைமையே தொடர்ந்து நீடிப்பதாகவும், மாறாக அயல் நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் உதவியோடும் தொடர்புகளை மேற்கொள்ள முற்பட்ட போதிலும் மியன்மார் அரசு அதில் கரிசணை கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.  

சவுதியின் புதிய மன்னரான சல்லமான் பதவியேற்றதன் பிற்பாடு தாம் உலக விவகாரங்களில் அதிக கரிசணை கொண்டு செயற்படுவதாகவும், யெமன் நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருவதாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் காலித் அஸ்ரி மேலும் குறிப்பிட்டார். 

குறித்த சந்திப்பு நிகழ்விற்கு இலங்கை சார்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

நன்றி –SlMuslim

Post a Comment

0 Comments