Subscribe Us

header ads

நல்லாட்சி அரசு முஸ்லிம்கள் விடையத்தில் அக்கறை காட்டுவதில்லை


நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் முஸ்லிம்களை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதும், ஆட்சியமைபதுமே ஒழிய, முஸ்லிம்களும், அவர்களது பிரச்சினைகளும் அல்ல என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் வில்பத்து காடழிப்பு தொடர்பாக RRT சட்டத்தரணிகள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின், அறிக்கைகளை முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் நான்  கண்டுகொண்டது என்னவென்றால், அவர்கள் எமது சமூகத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெறவும், ஆட்சி அமைக்கவுமே ஒழிய எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அவர்களது உள்ளத்தில் நான் காணவில்லை”
அவர்களது எண்ணமெல்லாம், TNA, ஜெனீவா கமரூன், ஒபாமா மற்றும் இந்தியாவை மாத்திரம் திருப்திப்படுத்தினால் போதும் என்ற நிலை காணப்படுகிறது.
தேசிய நிறைவேற்று அதிகார சபையில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்துள்ளனர். அங்கேயும் எமது பிரச்சினைகளைப் பற்றி நான் ஐந்து கூட்டங்களில் கூறினேன். இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை, சம்பந்தன் ஒரு கூட்டத்தில் பேசினார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
புதிய அரசாங்கம், நூறு நாட்களில் இதனை செய்யமுடியாது என நினைக்கலாம், என்றாலும் இவர்களுக்கு சற்று அழுத்தம் கொடுத்தாலே எமது வேலைகளை சாத்தித்துக் கொள்ளலாம்  என நான் நினைக்கின்றேன் .
தமிழர்கள் விடையத்தில் அரசு அக்கறை காட்டுவது ஏன்? அவர்கள் பலமாக உள்ளனர், அவர்களுக்கு பின்னால் பல அரச சார்பட்ட நிறுவனங்கள் காணப்படுகின்றன, டயஸ் போரா காணப்படுகிறது, உலகமே அவர்களது பிரச்சினைகளை அவதானித்துக்கொண்டு இருக்கிறது போன்ற காரணத்தினாலே அரசு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறது.
இந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் தொடர்பிலோ, கிழக்கு மாகாண மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தொடர்பிலோ அவர்களது நினைவில் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments