Subscribe Us

header ads

உலகின் மிகப்பெரிய கோயிலை கட்ட தங்களது நிலங்களை அன்பளிப்பாக அளித்த பீகார் முஸ்லிம்கள்



பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய மகாவீர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

2500 அடி நீளம், 1296 அடி அகலம், 379 அடி உயரத்துடன் சுமார் 200 ஏக்கர் நிலபரப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு தேவையான சுமார் 50 ஏக்கர் நிலம் இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அளித்ததாகும். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கட்டுமானப்பணிகளை நாங்கள் நடத்தியிருக்க முடியாது எனவும் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறுகிறார்.

இந்த கோயிலை கட்டுவதற்காக தங்களது நிலங்களை விற்பனை செய்துள்ள முஸ்லிம்களில் சிலர், நன்கொடையாகவும் சில நிலங்களை அளித்ததுடன், ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து வழிபாடு செய்யும் வகையில் அமையவுள்ள இந்த கோயிலை மிக விரைவில் கட்டிமுடிக்க வேண்டும் என அக்கறை காட்டி வருவதாகவும் கோயில் கட்டுமானப் பணிகளை முன்நின்று நடத்திவரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார்.

ராமர், சீதை, லவ-குசாவுக்கு தனி சிலைகளுடன் கட்டப்படும் இந்த கோயில் வளாகத்தில் 18 சிறிய கோயில்களும், உலகிலேயே மிகப்பெரிய சிவ லிங்கமும் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார். நேபாளத்தின் எல்லைப்பகுதியில் கட்டப்படும் இந்த கோயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட்டு வருவதாக கட்டுமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments