Subscribe Us

header ads

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்றது

அபூ அஸ்ஜத்


மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்றது* என்ற பழமொழி எமது ஞாபகத்துக்கு வருகின்றது.கடந்த சில மாதங்களாக ஹிரு  தொலைக்காட்சி உள்ளிட்ட சில சிங்கள ஊடகங்கள் அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்ட செய்தியாக வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழித்து குடியேறுவதாக முன்னெடுத்து வந்த பிரசாரம் பொய்யானது என்பதை அண்மையில் அதே தொலைக்காட்சியில் தோன்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன் தெளிவுபடுத்திய போதும் மீண்டும் இந்த சிங்கள இனவாத ஊடகம் புத்தளத்தில் உள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்வதாக செய்தியினை வெளியிட்டுவருகின்றது.


இந்த தொலைக்காட்சி என்பது இனவாதிகளின் கைக்கூலி என்பதை நிரூபிக்க போதுமான ஆவணங்களாக இந்த ஒளிபரப்பு உள்ளது.வில்பத்த காட்டினை அழிப்பதாக சீஜஏ என்னும் ஒரு நிகழ்ச்சியினை  காட்டி இந்த நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான செய்திகளை கொண்டு சென்றதுடன் ஓய்ந்துவிடாமல் அமைச்சர் றிசாத் பதியுதீனையும் இழக்கு வைத்து தாக்குதல் தொடுத்துவந்திருந்ததை யாவரும் அறிவார்கள்.

ஏன் அமைச்சர் றிசாத் இந்த தாக்குதலுக்கு உள்ளானார் என்பது தொடர்பில்  நாம் தேடிப்பார்ப்போமானால்,அதற்கு பதிலையும் நாம் காணலாம்.கடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவங்கள்,தாக்குதல்கள் உள்ளிட்ட இன்னோரன் செயற்பாடுகளின் போது கடும் போக்கு சிங்கள் இனவாத பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக செயற்பட்டு இவர்களை நீதிமன்றம் வரை அழைத்து சென்றவர் என்ற வகையிலும்,மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்ற கோபமும்,வெறித்தனமும் ஏற்பட்டதனால் இந்த ஹிரு போன்ற சிங்கள ஊடங்கள் தொடராக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தடைகளை ஏற்படுத்திவருகின்றது. 

ஹிரு (2015-05-22)சனிக்கிழமை ஒளிபரப்பான ஹிரு செய்தியில் மீண்டும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் செய்தியினை ஒளிபரப்பியது.இந்த செய்தியில் சில சிங்கள மக்கள் கருத்து கூறினர்.குறிப்பிட்ட வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் வட்டக்கண்டல் கிராம அதிகாரிக பிரிவில் வாழ்ந்த மக்கள்  காணியினை விற்றதாகவும்  அதனை தாங்கள் வாங்கியதாகவும் கூறியுள்ளனர். 

இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் இடம் பெயர்வுக்குள்ளான மன்னார் மக்கள் புத்தளம்,வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அதனையடுத்த அவர்களில் சிலர் தமக்கு தேவையான வீட்டுக் காணிகளை வாங்கியுள்ளனர்.இலங்கை சட்டத்தில் ஒருவர் தாம் வாழ்ந்த பிரதேசத்தில் மட்டுமா ?காணிகளை வாங்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.அந்த வகையில் தாங்கள் வாழ்வதற்கு தேவையான வீட்டத் துண்டு காணியினை வாங்கி சிறியமொரு வீட்டினையும் அதில் நிர்மாணித்து இம்மக்கள் அதில் வாழ்ந்தனர். 

அப்போதை யுத்த காலத்தில் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் இந்த யுத்தம் நிறைவுக்கு வரும் என்று எனவே இனிமேல் தாம் பிறந்த வடக்கு மண்ணில் முஸ்லிம்கள் வாழ முடியாது என்ற நிலையே காணப்பட்டது.எனவே  இடம் பெயர்வக்குள்ளான மக்கள் இருக்கின்ற பிரதேசத்தில் சிறய காணித் துண்டினை வாங்கினர்.

ஆனால் அப்போதைய அரசாங்கம் பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கையும்,கிழகை்கையும் மீ்ட்டு மக்கள் வாழும் சூழ் நிலையினை ஏற்படுத்தினர்.அதன் பிற்பாடு மக்கள் அங்கு செல்ல தயாராகினர்.தாங்கள் ஏற்கனவே வாழ்ந்தும்,அதற்கான காணி உறுதிகள் இருக்கின்ற போது அங்கு சென்று வாழ்வது தொடர்பில் ஹிரு தொலைக்காட்சிக்கு ஏற்பட்டு வலி என்ன வென்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது. 

அது இனவாதத்தின் உச்ச கட்டத்திற்கு போயுள்ளது.தொலைக்காட்சி நிகழ்சியான பலய என்னும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்றைய விவாதத்தின் போது வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழிக்க வில்லை,அதில் மீ்ள்குடியேற்றம் இடம் பெறவில்லை.அதனை சூழவுள்ள வனபரிபாலன திணைக்களத்தின் காணிகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படுவதாக கூறினர். 

இந்த நிலையில் இப்போது இடம் பெயர்ந்த மக்கள்  புத்தளத்திலும் காணி உறுதியினை  பெற்றுள்ளதாகவும்,அவர்களுக்கு தமது சொந்த மண்ணிலும் அவ்வாறான உறுதிகள் இருப்பதாகவும் தெரிவிப்பதை காணமுடிகின்றது.சொந்த மண்ணில் உறுதி இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்ட ஹிரு தொலைக்காட்சி எதற்காக மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியேறச் செல்கின்ற போது பிழையான செய்திகளை ஒளிரப்பி இம்மக்களது மீள்குடியேற்றத்திற்கு இடைஞ்ஞல் போடுகின்றார்கள் என்பதையும் எமது மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

எது எவ்வாறாக இருந்தாலும் ஹிரு  தொலைக்காட்சி பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் யார் என்பதை இலகுவாக ஊகிக்க முடிகின்றது.எவ்வளவு தான் தெளிவினையும் உண்மையினையும் விளக்கப்படுத்தினாலும் அவர்களது இலக்கு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு என்பதை காணமுடிகின்றது. 

இந்த சக்திகளுக்கு எதிராக செயற்பட வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.இனிமேல் முஸ்லிம் சமூகம்,மற்றும் சமூகத்தின் அரசியல்,மற்றும் புத்தி ஜீவிகள் மௌனமாக இருப்பீர்கள் எனில் அது எமது சமூகத்தின் உரிமைகளை இழக்கச் செய்துவிடும் என்பதை கவனத்தில் கொண்டு,அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மூட்டைக்கட்டிவித்து சமூகத்தின் உண்மையான விடிவுக்காக ஆயத்தம் ஆகுவோம்.


Post a Comment

0 Comments