2022 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமது நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்குவார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நேற்று கடுகண்ணாவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு இவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாராகியுள்ளோம் இத் தேர்தலில் அரசு வெற்றிபெறுவது உறுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.