Subscribe Us

header ads

கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி? ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்ற முக்கிய நீதியரசர் ஒருவரின் கணவரின் வைத்திய செலவிற்காக 2 மில்லியன் அனுமதித்து காசோலை வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த நீதியரசர் ஈவா வனசுந்தர எனவும், இது தொடர்பிலான தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

காசோலை எழுதப்பட்ட போதிலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய காரணத்தினால் அந்த பணத்தை உச்ச நீதிமன்ற நீதியரசரால் பெற்று கொள்ளமுடியாது போயுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உயர் நீதிமன்ற நீதியரசர் சட்டக்கல்லூரியில் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றாக கல்வி கற்றவர் எனவும்,  சட்டக்கல்லூரியில் ராஜபக்சவின் அனுமதியை முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்கவின் விசேட சிபாரிசின் மூலம் அனுமதி பெற்றவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 

குறித்த நீதியரசர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவையாற்றிய போது மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறிப்பிட்ட நீதியரசர் பதவிக்கு மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவரே கோத்தபாய ராஜபக்சவின் கைது செய்வதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவிற்கு காரண கர்த்தாவென்றும் இவர் முன்னாள் ஜனாதிபதி செய்த உதவிக்கு நன்றி கடனாகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments