எம்.பீ.ஸி (MBC Network (Pvt) Ltd) நிறுவனத்தின் பணிப்பாளர் ராஜேந்திரன் ராஜாமஹேந்திரனிடம் நட்டஈடு கோரி டிரைய் அட் தனியார் நிறுவனத்தின் (Triad (Pvt) Ltd) நிர்வாக இயக்குநர் திலித் ஜயவீர தனது சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
திலித் ஜயவீரவிற்கு எதிராக சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பப்பட்ட அவதூறு செய்திகளை கண்டித்து 2 பில்லியன் நஷ்ட ஈடு கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதே கடிதம் வணிக செய்தியாளரான பஃராஸ் ஷவுகேட்டலிக்கும் (Faraz Shauketaly) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவுமே 2 பில்லியன் நஷ்ட ஈடு கோரி ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் இக்கடிதம் 2015 ஆண்டு மே 17 ஆம் திகதி சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பப்பட்ட செய்தி மற்றும் குறுந்தகவல், இணைய செய்தி என்பனவற்றை மேற்கோட்காட்டியே அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தைக் கீழே காணாலாம்!



0 Comments