குண்டு, நீளம் என வகைவகையாக காய்க்கும் தர்ப்பூசணி பழங்கள் இந்த கோடைக் காலத்தில் சென்னைவாசிகளின் தாகசாந்திக்கு அமுதசுரபியாக விளங்கிவரும் அதேவேளையில் சீனாவை சேர்ந்த வேளாண்மைத்துறை வல்லுனர்கள் இதயம், முக்கோணம், மற்றும் செவ்வக வடிவிலான தர்ப்பூசணி பழங்களை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு சீனாவில் உள்ள நாஞ்சிங் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த நவீனரக பழங்கள் வடிவத்தில் மட்டுமல்ல.., சுவையிலும் சிறப்பிடத்தை பிடித்துள்ளதால் இவ்வகை பழங்களுக்கு சீன மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



0 Comments