நாள்தோறும் துளசியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.தொற்றுநோய்களை எதிர்க்கும்.ஜீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும். வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.துளசி விதை ஆண்மையை அதிகரிக்கும்.-vk-


0 Comments