முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வலது கரமாக திகழ்ந்த சக்திமிகு அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்சவின் மீது மீண்டும் ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர் அரச நிதி சட்டங்களை மீறி மகிந்த அரசுக்கு புகழ்பாட ஒரு தனியார் ஊடகத்திற்கு பல மில்லியன் அரச பணத்தை வழங்கியிருப்பதை காவற்துறை விஷேட பிரிவு கண்டு பிடித்துள்ளது.
தற்போது இந்த ஊடகத்தின் உரிமையாளர் வெளிநாடொன்றிற்கு தப்பி சென்று விட்டதாகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணத்தை இவர் அமைச்சரவைக்கு தெரியாமல் குறித்த ஊடகத்திற்கு வழங்கியுள்ளமை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-TW-


0 Comments