நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் தரம் குறைந்த மற்றும் காலாவதியான ரின் மீன்கள் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் கவனம் திரும்பியுள்ளது.
இது தொடர்பில் பாவனையாளர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சந்தையில் விற்பனையாகும் பதினொரு வகையான ரின் மீன்கள் தொடர்பில் அண்மையில் அதிகார சபையினால் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து வகையான ரின் மீன்கள் இலங்கையின் தரத்திற்குப் பொருத்தமற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆறு வகையான ரின் மீன்களை சந்தையில் தரம்பார்த்து பொதியிடப்பட்ட திகதி என்பனவற்றுடன் வாங்குமாறும் ரூமிமர்சூக் பாவனையாளர்களைக் கேட்டுள்ளார்.


0 Comments