Subscribe Us

header ads

முஸ்லிம்களுடைய சனத்தொகை அதிகரிப்பதற்காக, காடுகளை அழிக்க முடியாது - பொதுபல சேனா


முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி கட்டிடங்களை அமைப்பதன் மூலமாக இலங்கையில் காடழிப்பை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டுமென பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதமநிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வில்பத்துவிற்கு அருகில் உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்களை குடியமர்த்தியுள்ளதன் மூலமாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் இனவெறியை தூண்டுகிறார் என பொதுபல சேனா குற்றம் சாட்டியுள்ளது.

வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சை மீண்டும் பெறுவதற்காவே அமைச்சர் சிறிசேனவுடன் இணைந்தார்,அதன் மூலம் தனது இனவெறி நடவடிக்கைகளை தொடர்வதே அவரது நோக்கம், அவரிற்கு வலுவான சக்தியொன்றின் ஆதரவுள்ளது, அந்த ஆதரவு இல்லாவிட்டால் அவர் தற்போதைக்கு கைதுசெய்யப்பட்டிருப்பார்.

அவர்களது இனத்தின் சனத்தொகை அதிகரித்தால் அதற்காக எங்கள் காடுகளை, வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த இடங்களை அழிக்க முடியாது.

இதனை தடுப்பதற்காக அரசாங்கம முஸ்லீம்களுக்கு அடுக்குடிமாடி கட்டிடங்களை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

ஒரு குடும்பத்திற்கு இரு பிள்ளைகள் மாத்திரமே என்ற கொள்கையை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலமே இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பை  கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Post a Comment

0 Comments