ஐ.பி.எல். போட்டியின் போது பஞ்சாப் வீரர் மில்லர் அடித்த பந்து தாக்கி 10-வயது சிறுவன் காயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னைக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் பொருட்டு கடந்த வெள்ளி கிழமை மாலை பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக மில்லர் அடித்த பந்து வலையை தாண்டி பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சித்தார்த் என்ற சிறுவனின் நெஞ்சை தாக்கியது. உடனடியாக அச்சிறுவன் மயக்கம் அடைந்தான். மைதானத்தில் இருந்த மருத்துவ அறையில் முதல் உதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சித்தார்த் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களில் மில்லர் அடித்து பந்து தாக்கி காயம் அடைவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 9-ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்களால் 'கில்லர் மில்லர்' என அழைக்கப்படும் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அலோக் அச்சியின் வலது கண் பகுதியில் தாக்கியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கண் பார்வையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments