Subscribe Us

header ads

விழி பிதுங்கம் மஹிந்த அரசின் முன்னாள் அமைச்சர்கள் ! திருடர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!


மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் அடுத்த வாரம் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதால், இவர்கள் கைது செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டதாகவும் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கைது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் விசாரணைகள் முடிவடைந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 8 பேர் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்.
இலங்கை விமானப் படையினருக்கு மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ள கோடிக்கணக்கான நிதி மோசடி, லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள்,
தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கெரவலப்பிட்டி அனல் மின் நிலையம், திவிநெகும, ஹெஜின் உடன்படிக்கை, பீப்பல்ஸ் லீசிங் நிறுவனம் உட்பட 52 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments