முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் அடுத்த வாரத்தில் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக ஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணம் திருப்பி செலுத்தும் அடிப்படையின் கீழ் சதொச நிறுவனத்தில் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்புச் செயலாளர் டீ.எம்.ஏ.சகீர் ஏற்கனவே கைது செய்யப்ட்டுள்ளார்.
இதேவேளை சஜின்வாஸ் குணவர்தன பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளதாகவும் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.


0 Comments