ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸ் ஜீப் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (19) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற, பொலிஸ்
ஜீப்பில் மோதுண்டு காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் ஜீப்பை தாக்கியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பயணப் பொதிகளை எடுத்துச் செல்ல தடை
விதிக்கப்பட்டதை கண்டித்து துறைமுகத்தின் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை
நடத்தியிருந்தனர்.
0 Comments