பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகதமையால் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டிற்கு சென்றுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடு திரும்பியதும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். -VK-


0 Comments