Subscribe Us

header ads

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்த 8 வயது சிறுவன்


நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் உதவி வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தன்னந்தனியாக 1 லட்சத்து 66,000 ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்துள்ளான்.

அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் நீவ் சரஃப். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தான். காரணம் அது அவனது பெற்றோரின் தாய்நாடு. அவர்கள் சிறுவயதில் அங்குதான் வசித்தனர்.

இதனால், நேபாள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த நீவ், தான் சேமித்து வைத்திருக்கும் உண்டியலை உடைத்து 384 டாலரை (24,000 ரூபாய்) எடுத்தான். மேலும் தனது நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரிடமும் நேபாள மக்களுக்காக உதவி கேட்டான்.

Crowdrise என்ற நிதி திரட்டும் இணையதளத்தில் இதற்காக ஒரு தனி பக்கத்தை தொடங்கி தன்னந்தனியாக 26,675 டாலர் (சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்) நிதி திரட்டியுள்ளான்.


இந்த பணத்தை நேபாளத்தில் தன்னலமின்றி சேவை செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து உதவ இருக்கிறான் இந்த குட்டிப் பையன் நீவ்.

Post a Comment

0 Comments