அபு அலா -
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்து தருமாறு கோரி இன்று செவ்வாய்கிழமை காலை (12) கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கையில்,
தாங்கள் சொந்த மாவட்டங்களையும், கணவன் மற்றும் மனைவி, பிள்ளைகளையும் கடந்த 4, 5 வருடங்களாக இழந்து கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றிவருவதாகவும், தங்களின் இடமாற்றத்தை உடனடியாக செய்து தருமாறு வேண்டி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டிடம் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆசிரியர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments