டெல்லியில் இலஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீதியில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அந்த
பெண்ணை, போக்குவரத்து தலைமை பொலிஸ் அதிகாரி சத்தீஷ் சந்திரா என்பவர்
வழிமறித்துள்ளார்.
சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக 200 ரூபாய் தர வேண்டும் என்று அவர் நிர்பந்தித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம்
அடைந்த சத்தீஷ் சந்திரா அந்த பெண்ணை செங்கல்லால் தாக்கியதுடன், அவரது
வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
பெண்ணை தாக்கிய சத்தீஷ் சந்திரா கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக டெல்லி
மாநகர காவல் ஆணையர் பாஸி தெரிவித்துள்ளார். காயம் அடைந்த பெண்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments