Subscribe Us

header ads

இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் ரசிகர்கள், டுவிட்டரில் 20 ஆயிரம் அபிமானிகள், பேஸ்புக்கில் 10 லட்சம் லைக்: நாய்க்கு அடித்த யோகம்



பேஸ்புக் அல்லது டுவிட்டரில் கணக்கு தொடங்குபவர்கள், குறைந்தது ஒரு ஆயிரம் ’லைக்’ அல்லது ஒரு ஆயிரம் ‘பாலோவர்ஸ்’ ஆவது கிடைக்க வேண்டும் என வேண்டாத கடவுளே இல்லை என கூறலாம். 

ஆனால், இதைப்போன்ற எவ்வித வேண்டுதலும் இல்லாமல் ’மேன்னி’ என்ற இந்த ‘புல்டாக்’ இன நாய், வெகு குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் ரசிகர்கள், டுவிட்டரில் 20 ஆயிரம் அபிமானிகள், பேஸ்புக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமான 'லைக்'களைப் பெற்று அசத்தி வருகின்றது. 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள கால்நடை பராமரிப்பகம் ஒன்றில் இருந்து சமீபத்தில் மேன்னியை வாங்கிவந்த அம்பர் சாவேஸ் என்ற பெண், தனது செல்ல நாய்க்குட்டியின் பெயரால் புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த தளத்துக்கு ஏராளமான அபிமானிகள் உள்ளனர். மேன்னியின் அன்றாட குறும்புகளை புகைப்படங்களாக்கி பதிவேற்றம் செய்துவரும் அம்பர், மேன்னி பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த இணையதளத்தை தொடங்கவில்லை. ஆனால், நாளடைவில் யதார்த்தமாகவே அதன் புகழ் உயர்ந்துக் கொண்டே போகிறது என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்.





Post a Comment

0 Comments