Subscribe Us

header ads

6.2 மில்லியன் மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை ஒரு போதும் வீணடிக்க மாட்டேன் - ஜனாதிபி


ஸ்ரீலசுகட்சியின் மஹிந்த ஆதரவு பிரிவினரால் பல்வேறு வகையில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதற்கேற்ப குறித்த நேரத்திற்கு முன்பாகவே பாராளுமன்றம் சென்று தாமதமாகவே வந்த போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
சுதந்திரக் கட்சியில் இரு பிரிவுகள் இருப்பது வெளிப்படையாகியுள்ள நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் டி.பி. ஏக்கநாயக்க, வெல்கம போன்றோரின் முயற்சியின் அடிப்படையிலும் பௌத்த துறவிகளின் வேண்டுகோளின் அடிப்படையிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி இடம்பெறவிருந்த சந்திப்பு உதாசீனப்படுத்தப்பட்ட போதிலும் இச்சந்திப்புக்காக நேரம் ஒதுக்கியிருந்த ஜனாதிபதி ஒரு மணி நேரம் ஏனைய பிரமுகர்களுடன் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபி 6.2 மில்லியன் மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை ஒரு போதும் வீணடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளதுடன் இச்சந்திப்பின் நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதுதான் என டிலான் பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களையும் நிராகரித்துள்ளார்.
இது குறித்து இன்று காலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை மூலம் தெளிவு படுத்தியதுடன் குறித்த சந்திப்பில் கட்சி விவகாரம் தவிர வேறு எதுவும் கலந்துரையாடப்பட மாட்டாது என தெரிவித்திருந்தது. அதே போன்று அங்கு கட்சி விவகாரம் மட்டுமே பேசப்பட்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருந்ததுடன் சந்திப்பை குறித்த நேரத்திற்கு நிறைவு செய்த ஜனாதிபதி கிளம்பிய பின்னர் பத்து நிமிடங்கள் தாமதமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதமே ஜனாதிபதி மைத்ரி ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் துரோகமிழைக்க மாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் பலத்த பிரச்சாரங்களை முறியடித்து தமது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்ரிபால சிறிசேன தேர்தலில் வென்றால் தன்னைப் பிரதமராக்குவதற்கான வாக்குறுதியுடன் தான் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அதற்கும் சேர்த்தே மக்கள் ஆணை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்துமிந்த திசாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.


mahinda-rajapaksa-and-maithripala-sirisena-meeting (1)

mahinda-rajapaksa-and-maithripala-sirisena-meeting (4)
mahinda-rajapaksa-and-maithripala-sirisena-meeting (5)

Post a Comment

0 Comments