அரச ஊழியர்களுக்கு பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு சிறந்த, வினைத்திறன் மிக்க அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினம் என்பதனால் அன்றைய தினம் அவசியமான காரணங்கள் தவிர்த்து, விடுமுறை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, அரச ஊழியர்களின் பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் ஒரு மணித்தியாலமாக காணப்பட்டது. இதுவே, தற்பொழுது 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 Comments
"புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினம்" என அச்சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை தெரிந்திருந்தும் சில அரச நிறுவனங்களின் பிரதானிகள் அன்றைய தினமே (புதன்கிழமை) ஏதோ ஓர் விடயம் தொடர்பில் தனது ஊழியர்கள் கூட்டத்தை (staff meeting) நடாத்துகின்ற அவல நிலையை காணக்கூடியதாக உள்ளது.
ReplyDeleteஇதனால் அக்காரியாலயத்திற்கு வருகின்ற பொதுமக்கள்(பயனாளிகள்) இன்னுமோர் தினத்திற்கு வரவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, இவ்வாறான (காரியாலய ஊழியர்களுக்கான) கூட்டங்களை அன்றைய தினம் நடாத்தக்கூடாது என்ற விடயத்தையும் அச்சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும், காரியாலய பிரதம அதிகாரிகள் (உதாரணம் – OIC, ZDE, Accountant) அன்றைய தினம் தங்களை சந்திக்க வருகின்ற நெரிங்கியவர்களுடன் சம்மந்தமில்லாத விடயங்களை பேசிக்கொண்டிருக்காமல் குறித்த விடயத்தை மட்டும் பேசி அவர் வந்த விடயத்தை குறித்த நிமிடங்களுக்குள் கதைத்து முடிக்க வேண்டும். ஏனனில் இன்னும் பலர் வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர், தனது தேவை குறித்து பேசுவதர்க்காக.
எனவே, இச்சுற்று நிருபத்தின் நோக்கம் 100% நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதே பொதுமக்களது அவா !!!