Subscribe Us

header ads

நல்லாட்சிகாரர்கள் சிறுவர்களையும் பழி வாங்குகின்றனர்! மஹிந்த குற்றச்சாட்டு


100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்த போது தீவிரவாதத்தை முற்றாக அழிப்பேன் என வாக்குறுதி வழங்கினேன், அதனை 2009ஆம் ஆண்டிற்குள் அழிப்பதற்கான திறன் எங்களிடம் காணப்பட்டது.

பின்னர் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய நாங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்து நாட்டை மேம்படுத்தும் விதம் தொடர்பில் சுட்டிக்காட்டினோம்.

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்களில் மஹிந்தோதய என்ற பெயர் பலகையை நல்லாட்சியினால் நீக்கி விட்டார்கள்.

எனது பெயர் மஹிந்த, மஹிந்தோதய எனது பெயர் அல்ல. தற்போதைய அரசாங்கம் சிறுவர்களை பழி வாங்குகின்றார்கள்.

ஆய்வுகூடங்களில் சிறுவர்களுக்கு அவசியமாக ஆய்வுப் பொருட்களை கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வந்துள்ளோம். எனினும் அதனை சிறுவர்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் அப்பாவி சிறுவர்களை அரசாங்கம் பழிவாங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments