பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
23 மா நகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் கலைக்கப்பட உள்ளன.
335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக் கோரப்பட்டு முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீடித்திருந்தது.
உள்ளூராட்சி சபைகள் 15ம் திகதி கலைக்கப்படுகின்றன
இலங்கையின் உள்ளுராட்சி சபைகள் எதிர்வரும் 15ம் திகதியன்று கலைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் இந்த சபைகளுக்கான தேர்தல்கள் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலின் மூலம் கல்விகற்ற உறுப்பினர்கள் தொகுதிகளில் இருந்து தெரிவாக வாய்ப்பிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

0 Comments