உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்வரும் 13ம் திகதி அமைச்சரவை கூடி ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலசுவினால் முன்மொழியப்பட்டுள்ள
அம்சங்கள் உள்ளடங்களாக பொது மக்கள் மற்றும் புத்திஜீவிகளிடமிருந்தும்
தனக்கு ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று வருவதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ள
அதேவேளை குறித்த விடயத்தைக் கவனமாக ஆராயும்படி சட்டவரைஞர் குழு
ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய
கட்சிகளின் அரசியல் எதிர்காலம் இத்திட்டத்தில் பாதிக்கப்படும் எனும
நிலைப்பாடும் தெரியப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் இக்கட்சிகள்
ஒன்றிணைந்து தமது முன்மொழிவுகளையும் சமர்ப்பித்துள்ளன. இந்நிலையில் இது
குறித்து அமைச்சரவை ஆராயவிருப்பதோடு தேசிய நிறைவேற்று சபையில் அ.இ.ம.கா,
மு.கா, ஜே.வி.பி உட்பட கட்சித் தலைவர்களும் அங்கம் வகிக்கும் நிலையில்
சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவ விவகாரம் தொடர்பில் தகுந்த முறையில்
கவனம் செலுத்தப்படும் என அமைச்சர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


0 Comments