Subscribe Us

header ads

மகிந்தவை தனியாக சந்திக்க விரும்பாத மைத்திரி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனைகளை விதித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் எதிர்வரும் 6ம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நிபந்தனையை விதித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயார் இல்லை எனவும்,
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பிரதிநிதிகளும், தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பிரசன்னமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்சவின் சார்பில் கலந்து கொள்ளவுள்ள பிரதிநிதிகள் குறித்து நாளைக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாது முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments