Subscribe Us

header ads

அமெரிக்காவில் பேச்சுக்களால் ரூ.160 கோடி சம்பாதித்த கிளிண்டன் தம்பதி



அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான கிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.       

இந்த நிலையில், பில் கிளிண்டனும், கிலாரி கிளிண்டனும் கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை தங்களது பேச்சுக்கள் வாயிலாக 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.160 கோடி) சம்பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது மட்டுமன்றி, கிலாரி கிளிண்டன் எழுதியுள்ள ‘ஹார்டு சாய்சஸ்’ (கடினமான தேர்வுகள்) என்ற புத்தகத்துக்கு, பங்குவீத உரிமைத்தொகை (ராயல்ட்டி) 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) கிடைத்துள்ளது. 

Post a Comment

0 Comments