படிப்புக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 102 வயதில் ஒரு பெண் பி.எச்.டி. பட்டம் பெற்றார்.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் இன்ஜெபோர்க் சிலாம் – ரபோபோர்ட். தற்போது வயது 102. இவர் கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்பு இவர் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார்.
அப்போது ஜெர்மனியை ‘நாஜி’ அரசு ஆட்சி செய்தனர். ஆராய்ச்சி படிப்பில் இறுதி தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கவில்லை. எனவே, அவரால் டாக்டர் பட்டம் பெற முடியவில்லை.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனியில் நாஜி அரசு வீழ்ந்தது. ஆட்சி மாறியதும் கட்சிகளும் மாறின. அதன் பின்னர் ரபோபோர்ட் தான் இடையில் நிறுத்திய ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.
இருந்தும் படிப்பை முடிக்க முடியவில்லை. ஆனால் படிப்புக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் தொடர்ந்து படித்தார். இறுதியில் சமீபத்தில் தனது 102–வது வயதில் தான் எடுத்த ஆராய்ச்சி பட்ட படிப்பை படித்து முடித்தார்.
தனது ஆராய்ச்சி கட்டுரையை ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியது. தற்போது அவர் டாக்டர் ரபோபோர்ட் ஆகி விட்டார்.
இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். டாக்டர் ரபோபோர்ட் பெர்லினில், பிறந்தார். அவரது தாயார் மரியா சிலிம் யூதமதத்தைச் சேர்ந்த இவர் யூதர் ஆவார்.
0 Comments