Subscribe Us

header ads

வில்பத்து விவகாரம் தொடர்பில் ரிஷாத் ஆக்ரோஷம்: வழக்கு தொடுக்க உத்தேசம்

வில்பத்து வனப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் எவரும் குடியேறவில்லை எனவும், தாம் இது தொடர்பிலான எந்தவொரு சவாலுக்கும் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் வெளியிடப்படும் வில்பத்து வனப்பிரதேச முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலவிளக்கம் வழங்கும் முகமாக கொழும்பிலிருந்து சுமார் 85க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் ஊடகாவியலாளர்கள் குழுவொன்றை அமைச்சர் நேற்று மன்னார், மறிச்சுக்கட்டி, முசலி, வில்பத்து பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது அங்கு சில ஊடகங்கள் மற்றும் பெளத்த அமைப்புக்களுக்கு எதிராக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வில்பத்து வனப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளார்களா? உள்ளிட்ட வினாக்களை தொடுத்து வாதங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை இனவாத கண்ணோட்டத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு வரும் சில ஊடகங்கள் மற்றும் பெளத்த அமைப்புக்களுக்கு எதிராக இளம் சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று விரைவில் அடிப்படை மனித உரிமை வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment

0 Comments