ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலான சந்திப்பு நாளை ஜனாதிபதி
செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு அல்லது மாலை 2 மணிக்கு இச்சந்திப்பை நடத்த ஜனாதிபதி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதற்கு முன்னர் சபாநாயகரின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பு சந்திப்பும் கடந்த மாதம் 25 திகதி இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும் இச்சந்திப்பு நாளை இடம்பெறுவது உறுதி என கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments