கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் மூன்றாவது பொது கூட்டம் ஏப்ரல் மாதம் 17ம் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று மக்ரிப் தொழுகையை தொடர்ந்து கத்தார் பனார் மண்டபத்தில் (Auditorium) நடைபெற்றது.
மாஸ்டர் அப்தியின் கிராஅத்துடன் ஆரம்பமான
இப்பொது கூட்டத்தில் செயலாளர் ஹில்பி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த உப
செயலாளர் மபாஸ் சென்ற பொதுகூட்ட அறிக்கையை வாசித்தார்.
எனது சுயசரிதை எனும் தலைப்பில் PAQ
அமைப்பு கடந்து வந்த பாதை பற்றிய கட்டுரையை சகோ.ரமீஸ் விபரிக்க தலைமை உரையை
சகோ.முஸ்தாக் நிகழ்த்தினார். இதன்போது விஷேட பேச்சாளர்களாக இலங்கை மஜ்லிஸ்
கத்தார் தலைவர் சகோ.நசீம் யாகூப், அனைத்து சம்மேளன தலைவர் சகோ. அமீர்தீன்
மௌலானா மற்றும் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா ஆகியோர்
கலந்து சிறப்பித்திருந்தனர்.
டாக்டர் ரயீஸ் முஸ்தபா தனதுரையில் “அறிவு
என்பது எப்போதும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், அது உலக அறிவு என்றும்,
மறுமைக்கான அறிவு என்று பிரித்து நோக்கலாகாது.” என தெரிவித்தார். இதன் போது
PAQ அமைப்பு பற்றிய அழகான பாடலை சகோ. அமான் பாட இந்நிகழ்வின் பிரதான
கருபொருளான “புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு” இடம்பெற்றது.
இறுதியாக சகோ. ஹக் அவர்களின்
நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. கத்தார் நாட்டின் பல
பாகங்களிலிருந்தும் வருகை தந்து இந்நிகழ்வினை சிறப்பாக்கிய
உறுப்பினர்களுக்கு ஏற்பாட்டுக்குழுவினர் நன்றியினை தெரிவித்து
கொள்கின்றனர்.
இந்நிகழ்வின் இறுதியில் அஷேய்க்
சியாஹுதீன் (மதனி) அவர்களின் உணர்வு பூர்வமான சொற்பொழிவு அனைவரையும் கண்
கலங்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-வசீம் அகரம்-












0 Comments